For Daily Alerts
Just In
7 புதிய செல்போன்களை அறிமுகப்படுத்தும் மோட்டாராலோ
டெல்லி: திருவிழாக் காலத்தை முன்னிட்டு ஏழு விதமான புதிய செல் போன்களை வெளியிடுகிறது மோட்டாராலோ நிறுவனம்.
அமெரிக்காவைச் சேர்ந்த செல்போன் தயாரிப்பு நிறுவனம் மோட்டாராலோ. அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்தியாவில் 7 புதிய செல்போன் சாதனங்களை அது அறிமுகப்படுத்தவுள்ளதாம்.
குறைந்த விலை முதல் நடுத்தர விலையிலான போன்கள் இவை. இவற்றின் விலை ரூ. 3500 முதல் ரூ. 8000 வரை இருக்குமாம். இவற்றில் ஆறு போன்கள், மோட்டாராலோவின் யுவா தொடரைச் சேர்ந்தவை.
இந்தியாவில் தற்போது திருவிழாக் காலம் என்பதால் அதையொட்டி இந்த புதிய வகை போன்களை களம் இறக்குகிறதாம் மோட்டாராலோ.