நெல்லை- பிலாஸ்பூர் ரயில் டிசம்பர் 26 முதல் நிறுத்தம்
நெல்லை: நெல்லை-பிலாஸ்பூர் ரயில் டிசம்பர் 26ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.
நெல்லையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம், வழியாக பிலாஸ்பூருக்கு வாரந்திர சிறப்பு ரயில் சேவை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும். பிலாஸ்பூரில் இருந்து செவ்வாய்கிழமை புறப்பட்டு வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு நெல்லை வந்து சேரும்.
இந்த ரயில் சேவை வருகிற டிசம்பர் மாதம் 26ம் தேதி நெல்லையில் இருந்து கிளம்பி பிலாஸ்பூர் சென்றடைவதோடு நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் நெல்லை-பிலாஸ்பூர் ரயில் சேவையை வாரம் இருநாட்கள் இயக்க போவதாகவும், நெல்லையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக குஜராத்துக்கு வாரம் இருநாள் அதிவிரைவு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை வழியாக ராமேஸ்வரத்துக்கு வாரத்தில் 3 நாட்கள் விரைவு ரயிலும், மதுரை-ஜம்முதாவி இடையே இயக்கப்படும் வாரந்திர ரயில் சேவை நெல்லை வரை நீடடிக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிலாஸ்பூர் ரயில் நிறுத்தப்படுகிறது.