பள்ளியில் தூக்கில் தொங்கிய மாணவி-கொலையா?

பொள்ளாச்சியைச் சேர்ந்த சார்லஸ் என்பவரின் மகள் செல்வியா மேரி (16). ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த செல்வியா மேரி திருவண்ணாமலையில் ஒரு விடுதியில் தங்கி 10ம் வகுப்பு படித்தார்.
இதையடுத்து சென்னை பெரம்பூரில் டான் பாஸ்கோ பள்ளியில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகளுடன் தங்கிகயிருந்தபடி அதே பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார் செல்வியா மேரி.
இன்று காலை வாட்ச்மேன் ஏகாம்பரம் பள்ளியை திறந்தபோது வராண்டாவில் செல்வியா மேரி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக அவர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தந்தார்.
அவர்கள் கொடுங்கையூர் போலீசுக்கு தகவல் தரவே போலீசார் வந்து உடலைக் கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது.
இந்த சம்பவத்தையடுத்து இன்று பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.