For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்லூரி-பல்கலை: மாணவ- மாணவிகள் ஜீன்ஸ் அணிய தடையில்லை!

Google Oneindia Tamil News

Chennai univ VC relaxes jeans, T-shirt rule
சென்னை: சென்னை பல்கலைக்கழக, கல்லூரி மாணவ- மாணவிகள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வரலாம் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

பல்கலைக்கழக, கல்லூரி மாணவ- மாணவிகள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வகுப்புக்கு செல்வதில் தவறு இல்லை என்பது எனது கருத்து.

சில பேராசிரியர்கள், துணை வேந்தர்கள் ஜீன்ஸ் அணிகிறார்கள்.
டி-சர்ட்டுகள் 100, 150 ரூபாய்க்கு கிடைக்கும். வேறு உடைகள் வாங்கினால் அதிகம் செலவாகும்.

சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வரும் மாணவ- மாணவிகளுக்கு நான் தடை விதிக்க மாட்டேன். தேவையில்லாத வாசகங்கள் இடம் பெறும் டி-சர்ட்டுகள் அணிவதை தவிர்த்து, வாசகம் இடம் பெறாத டி-சர்ட்டுகளை அவர்கள் அணியலாம்.

தமிழ் கலாசாரத்துக்கு எந்த குறைபாடும் ஏற்படாத வகையில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரி மாணவ- மாணவிகள் ஆடை அணிய வேண்டும். இது குறித்து பல்கலைக்கழக துறை தலைவர்கள், கல்லூரி முதல்வர்கள், மாணவ- மாணவி பிரதிநிதிகளை வரவழைத்து ஆலோசனை நடத்தப்பட்டு உடைகள் குறித்து முடிவு செய்யப்படும்.

செல்போன் இன்று அத்தியாவசியமானதாக இருக்கிறது. எனவே, மாணவ- மாணவிகள் செல்போன் வைத்துக் கொள்ளலாம். ஆனால், வகுப்பறையில் அதை பயன்படுத்தக்கூடாது.

விரைவில் சென்னைப் பல்கலைக்கழக மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும் என்றார்.

முந்தைய துணை வேந்தர் ஜீன்ஸ், டி-சர்ட்கள், செல்போன்களுக்கு தடை விதித்த நிலையில் அந்த விதிகளை தளர்த்தியுள்ளார் திருவாசகம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X