For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கைக்கு எட்டாத தூரத்தில் தங்கம்... இறங்கி வருமா?

Google Oneindia Tamil News

Gold rate touches record high
தங்கத்தின் விலை சாமான்ய மக்களின் கைக்கு எட்டாத தூரத்துக்குச் சென்றுவிட்டது. நேற்று முன்தினம் ஒரு சவரனுக்கு ரூ.176 வரை அதிகரித்த தங்கம், நேற்று மீண்டும் பெரும் உயர்வைச் சந்தித்தது. சென்னையில் பவுனுக்கு ரூ.136 உயர்ந்து சவரன் 12,240 ஆக விற்பனையானது.

இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 232 ரூபாய் உயர்ந்தது தங்கத்தின் விலை. இன்றைய விலை பவுன் ரூ.12472.

இவ்வளவு மோசமான விலை உயர்வு இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை.

நிலைமை இன்னும் சில காலத்துக்கு இப்படியே தொடரும் என்று நகை வியாரிகள் கூறிவருவதால், சாமான்ய மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதிவரை தங்கம் விலை ரூ.10000க்குள்தான் இருந்தது. அதையே பெரும் விலை உயர்வாகக் கருதி வந்தனர் மக்கள். ஆனால் தங்கத்தை ஆபரணத்துக்காக வாங்குவதோடு நில்லாமல், பங்குகளுக்கு இணையான மாற்று முதலீட்டு வாய்ப்பாகவும் கருத ஆரம்பித்துவிட்டனர் மக்கள். இதனால் தங்கத்தின் விலையில் தாறுமாறான உயர்வு ஏற்பட்டு வருகிறது.

நிலம், பங்குகள் என முதலீடு செய்து வந்தவர்கள், இப்போது ஆகச் சிறந்த முதலீடு என தங்கத்தில் பணத்தைக் கொட்டுகின்றனர். இதனால் மற்ற எந்த நாடுகளையும் விட வர்த்தகத்துக்காக தங்கத்தை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

பொதுவாக பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில் தங்கத்தின் விலை சிறிது உயரும். மற்ற நாட்களில் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துவிடும். ஆனால் சமீப காலங்களில் தங்கத்தின் விலை ஏற்றம் என்பது ஒரு வழிப்பாதையாக மாறிவிட்டது. ஏறும் விலை மீண்டும் இறங்குவதே இல்லை.

கடந்த 2-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.1,491-ஆகவும் சவரன் ரூ.11,928 ஆகவும் விற்பனையானது.

நேற்று முன்தினம் தடாலடியாக கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ரூ.1,513-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.176 அதிகரித்து உச்சக்கட்டமாக ரூ.12,104-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் ஒரு பவுன் தங்கத்தின் விலை முதல் முறையாக ரூ.12 ஆயிரத்தை தொட்டது.

நேற்று குறையும் என்று எதிர்பார்த்து நகைக்கடைகளுக்கு வந்தவர்களை ஏமாற்றும் வகையில், ஒரே நாளில் பவுனுக்கு ரூ.136 அதிகரித்து வரலாறு காணாத வகையில் ரூ.12,240-க்கு விற்பனையானது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.1,530-க்கும், பவுன் 12,240 ஆக உயர்ந்தது.

இதனால் திருமணம் மற்றும் விசேஷத்துக்காக சிறிய அளவில் நகை வாங்கும் ஏழைக் குடும்பங்கள் மற்றும் கீழ் நடுத்தட்டு மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாகியுள்ளனர் (நடுத்தர வர்க்கத்தை இதில் சேர்க்க முடியாது... அவர்கள் உயர்தட்டு வர்க்கமாக மாறத் துடிப்பவர்கள். தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று!)

தாலிக்குக் கூட இனி தங்கம் வாங்கணுமா? என்று கேட்கும் நிலைக்கு சாமான்ய மக்கள் வந்துவிட்டனர்.

தங்கம் விலை குறையுமா?

இந்தக் கேள்விக்கு சென்னை நகைக்கடைக்காரர்கள் சொல்லும் பதில், கிட்டத்தட்ட ரமணனின் வானிலை அறிக்கை மாதிரிதான் உள்ளது...

"இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை. அப்படியே குறைந்தாலும் அதில் பெரிய மாறுதல் இருக்காது. பங்குச் சந்தை சரிவிலிருப்பதால் மேலும் விலை உயரவே வாய்ப்பு உள்ளது. பண்டிகை, திருமண சீஸன் முடிந்த பிறகு ஓரளவு குறையலாம் அல்லது கூடலாம்!"

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X