For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை இடைத் தேர்தல்: 39 வேட்பாளர்கள் போட்டி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை இடைத் தேர்தலில் மொத்தம் 39 வேட்பாள்கள் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக திருச்செந்தூரில் 25 பேர் போட்டியிடுகின்றனர். வந்தவாசி தொகுதியில் 14 பேர் உள்ளனர்.

திருச்செந்தூர், வந்தவாசி (தனி) சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த 25-ந் தேதி தொடங்கி 2-ந் தேதி வரை நடைபெற்றது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 3-ந் தேதி நடைபெற்றது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நேற்று கடைசி நாள் ஆகும்.

நேற்று மாலை 3 மணிக்கு இரு தொகுதிகளிலும் இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

திருச்செந்தூர் தொகுதியில் 25 பேரும், வந்தவாசி தொகுதியில் 14 பேரும் இறுதியாக களத்தில் உள்ளனர்.

திருச்செந்தூரில்...

திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக மொத்தம் 33 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர். இதில் 28 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

சுயேச்சை வேட்பாளர்கள் எஸ்.கணேசன், டாக்டர் வி.கே.வீரேசுவரன், எஸ்.ஆர்.எம்.பாலசுப்பிரமணியம் ஆகிய 3 பேர், தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, தொகுதி தேர்தல் அதிகாரியும், தூத்துக்குடியில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரியுமான துரை.ரவிச்சந்திரன், உதவி தேர்தல் அதிகாரி பாக்கியம் தேவகிருபை ஆகியோர் இறுதியாக போட்டியிடும் 25 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டனர்.

பின்னர் தேர்தல் பார்வையாளர் வீரேந்திரகுமார் மீனா முன்னிலையில் அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

இறுதி வேட்பாளர்கள், சின்னங்கள் விவரம்:

1. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (தி.மு.க.) - உதயசூரியன்
2. அம்மன் த.நாராயணன் (அ.தி.மு.க.)- இரட்டை இலை.
3. கோமதி ஆ.கணேசன் (தே.மு.தி.க.)- முரசு
4. டி.அலெக்சாண்டர் பொன்னுதுரை (சுயே)- மின் கம்பம்.
5. சி.அன்பழகன் (சுயே)- மெழுகுவர்த்தி.
6. ஆ.ஆசைத்தம்பி (சுயே)- கிளாஸ் டம்ளர்.
7. ப.ஆறுமுகம் (சுயே)- ரெயில் எந்திரம்.
8. மு.கணேசன் (சுயே)- கிரிக்கெட் மட்டை.
9. சா.கண்ணன் (சுயே)- கேரட்.
10. பி.கந்தசாமி (சுயே)- கரும்பலகை.
11. நா.காசிவிசுவநாதன் (சுயே)- நாற்காலி.
12. வி.குமாரசாமி (சுயே)- பிரஷ்
13. மு.செல்லதுரை (சுயே)- அலமாரி
14. சு.சொர்ணசேகர் (சுயே)- பேட்டரி டார்ச்
15. டி.டேனியல் (சுயே)- பலூன்
16. ஏ.நூர்முகமது (சுயே)- கேஸ் சிலிண்டர்
17. டாக்டர் கே.பத்மராஜன் (சுயே)- மோதிரம்
18. ஏ.புகாரி (சுயே)- ரொட்டி
19. மா.மன்மதன் (சுயே)- மட்டையடி வீரர்
20. து.முத்துகுமார் (சுயே)- கேமரா
21. மு.முத்துபாண்டி (சுயே)- பிரீப்கேஸ்
22. எம்.ரபீக் (சுயே)- சீலிங் பேன்
23. கு.ராஜா (சுயே)- வாழைப்பழம்
24. சு.வாஷிங்டன் (சுயே)- தொலைகாட்சி பெட்டி
25. செ.ஜெயக்குமார் (சுயே)- ரம்பம்.

வந்தவாசியி்ல்...

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி (தனி) தொகுதியில் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். பரிசீலனைக்குப்பின் அவற்றில் 14 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வாபஸ் பெற கடைசி நாளான நேற்று மாலை 3 மணி வரை, யாரும் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறவில்லை. அதைத் தொடர்ந்து, செய்யாறு சிப்காட் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகத்தில் இறுதியாக போட்டியிடும் 14 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டது.

1. எஸ்.பி.ஜெ.கமலக்கண்ணன் (தி.மு.க.)- உதயசூரியன்
2. பி.முனுசாமி (அ.தி.மு.க.)- இரட்டை இலை
3. என்.ஜனார்த்தனன் (தே.மு.தி.க.) - முரசு
4. எஸ்.சுரேஷ்ராஜ் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி)- மெழுகுவர்த்தி
5. சுப்பிரமணியன் (தேசிய பாதுகாப்பு கழகம்)- தேங்காய்
6. ஏ.கமலக்கண்ணன் (சுயே)- கூடை
7. எம்.துரைராஜ் (சுயே)- கத்திரிகோல்
8. கா.முனுசாமி (சுயே)- மக்காசோளம்
9. கு.முனுசாமி (சுயே)- பட்டம்
10. ஏ.ஏழுமலை (சுயே)- கூரை மின்விசிறி
11. வி.பரதன் (சுயே)- தொலைக்காட்சி பெட்டி
12. ஆர்.முனுசாமி (சுயே)- வாழைப்பழம்
13. சி.குணசேகர் (சுயே)- புகைப்பட கருவி
14. எல்.அரிகுமார் (சுயே)- கிரிக்கெட் மட்டை.

பெண் வேட்பாளர்கள் இல்லை

இரு தொகுதிகளிலும் ஆண்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். ஒரு பெண் வேட்பாளர் கூட இங்கு போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X