For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி ரூ 299-க்கு 1 Mbps வரையறையில்லா பிராட்பேண்ட்!

Google Oneindia Tamil News

Broadband
டெல்லி: இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் போட்டி காரணமாக இனி 1 Mbps திறன் கொண்ட வரையறையில்லா பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ 299 மட்டுமே கட்டணம் என்ற நிலை தோன்றியுள்ளது. இது பிராட்பேண்ட் பயனாளர்களை சந்தோஷப்படுத்தும் செய்தியாகும்.

சமீபத்தில் 3 ஜி பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவைக்கான ஏலம் முடிந்தது. இதில் இன்போடெல் நிறுவனம் 22 சர்க்கிள்களுக்கான உரிமத்தை வென்றுள்ளது. இந்த நிறுவனத்தைத்தான் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார்.

அண்ணனுக்கு ஆதரவாக, ஏலத்திலிருந்தே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் விலகிக் கொண்டது.

எனவே, ஏராளமான சலுகைகளுடன் முகேஷின் ரிலையன்ஸ் நிறுவனம் பிராட்பேண்ட் சேவைகளை அளிக்கப் போகிறது.

அதே நேரம், இந்தப் போட்டியைச் சமாளிக்க, நிறைய சலுகைத் திட்டங்களை போட்டி நிறுவனங்களும் அறிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஏர்டெல், ஏர்செல், டாடா போன்ற நிறுவனங்களும் 3 ஜி பிராட்பேண்ட் சேவை அளிக்க உள்ளன.

இன்னொரு பக்கம் அரசுத் துறையின் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கும் 3 ஜி பிராட்பேண்ட் சேவை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சர்க்கிள்களிலும் இந்த சேவை கிடைக்கும்.

தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பிராட்பேண்ட் சேவை அளிப்பதால், 1 Mbps வரை வரையறையில்லா பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ 299 மட்டும் செலுத்தினால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஏற்கெனவே, பிஎஸ்என்எல் நிறுவனம் 2 Mbps வரை வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ 1350 வசூலிக்கிறது. (பிஎஸ்என்எல்லில் மட்டுமே இந்த வசதி. மற்ற நிறுவனங்கள் 2 Mbps வரை அன்லிமிடட் என்று கூறிவிட்டு, குறிப்பிட்ட அளவு டவுன்லோட் முடிந்ததும், 256 kbps ஆக சுருக்கி விடுகின்றன. இது வாடிக்கையாளருக்குத் தெரிவதில்லை!).

இனி இந்த கட்டணமும் மாறும். 4 Mbps வரையிலான அன்லிமிடட் பிராட் பேண்ட் இணைப்பு ரூ 800-க்கே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன்மூலம் விரைவான டவுன்லோட் மற்றும் தொலைக்காட்சி இணைப்பைப் பெற முடியும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X