For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பிஎட் படிப்புக்கான நேர்காணல் 24ம் தேதி தொடக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பிஎட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நேர்காணல் (கவுன்சிலிங்) வருகிற 24ம் தேதி தொடங்குகிறது.

மொத்தம் 7 அரசு மற்றும் 14 அரசு உதவி பெறும் பிஎட் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை இது.

இது குறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர்சேர்க்கை செயலாளர் பரமேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு பி.எட். மாணவர்சேர்க்கைக்கான கவுன்சிலிங் 24-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை சென்னை கடற்கரை சாலையில் உள்ள வெலிங்டன் சீமாட்டி பி.எட். கல்லூரியில் நடைபெற உள்ளது.

24-ந்தேதி காலையில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் ஆகியோருக்கும் பிற்பகல் பொருளாதாரம், தமிழ் ஆகிய பாடங்களுக் குரியவர்களுக்கும் நடக்கிறது.

25-ந்தேதி காலை ஆங்கிலமும், பிற்பகல் ஆங்கிலம், வரலாறு ஆகியவற்றிற்கும், 26-ந்தேதி காலை இயற்பியல் பாடத்திற்கும், பிற்பகல் இயற்பியல், கணிதம் ஆகியவற்றுக்கும் நடைபெற உள்ளது.

27-ந்தேதி காலையிலும் பிற்பகலும் கணிதம் பாடத்திற்கு நடக்கிறது. 28-ந்தேதி காலை வேதியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களுக்கும் பிற்பகல் வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், புவியியல் பாடங்களுக்கும், 29-ந்தேதி காலை தாவரவியல், மனையியல் பாடங்களுக்கும், பிற்பகல் தாவரவியல், மனையியல், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும், 30-ந்தேதி காலையிலும் பிற்பகலிலும் விலங்கியல் பாடத்திற்கும் கவுன்சிலிங் நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X