For Quick Alerts
For Daily Alerts
டாடா குழுமத் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை-இந்திரா நூயி மறுப்பு

டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா ஓய்வு பெறவுள்ளார். அவருக்கென்று வாரிசுகள் யாரும் இல்லை. எனவே புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்கான தேடல் நடந்து வருகிறது. பலருடைய பெயர்களும் இதில் அடிபடுகின்றன.
அந்த வரிசையில் பெப்சி நிறுவனத் தலைவரும், இந்திய அமெரிக்கருமான இந்திரா நூயியின் பெயரும் அடிபடுகிறது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து இந்திரா கூறுகையில், ரத்தன் டாடா மிகப் பெரிய மனிதர், ஆச்சரியகரமான ஒரு மனிதர். அவரது இடத்தை நிரப்ப தகுதியான பலர் இந்தியாவிலேயே உள்ளனர். நான் தற்போது உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றின் தலைவராக செயல்படுகிறேன். எனது இந்தப் பணியை நான் நேசிக்கிறேன், இதில் தொடருகிறேன் என்று கூறினார்.