For Daily Alerts
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் 7-ம் தேதி ஸ்டிரைக்
டெல்லி: வரும் 7-ம் தேதி நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏஐபிஇஏ) சார்பில் நடக்கவுள்ளது. இதற்கு சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட 8 தொழிற்சங்கள் ஆதரவு அளித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை, வங்கித்துறையில் சீர்திருத்தம் செய்தல், கடும் விலைவாசி உயர்வு போன்றவற்றை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தவுள்ளனர்.