For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளி-சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே

Google Oneindia Tamil News

Train
சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி காணப்படும் கூட்ட நெரிசலை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நவம்பர்5ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களுக்கான வழக்கமான ரயில்கள் அனைத்தும்ஏற்கனவே நிரம்பி விட்டன.

இந்த நிலையில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்டிரலில் இருந்து திருநெல்வேலிக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6.15 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 0601) இயக்கப்படுகிறது. இது மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 5-ந் தேதி மதியம் 2 மணிக்கு சிறப்பு ரயில் (0602) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடிக்கு நவம்பர் மாதம் 6-ந் தேதி இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரயில் (0613) இயக்கப்படுகிறது. இது மறுநாள் காலை 10 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 7-ந் தேதி மதியம் 3.45 மணிக்கு சிறப்பு ரயில் (0614) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் (0603) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் மதியம் 2 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் (0604) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

சென்னை சென்டிரலில் இருந்து திருநெல்வேலிக்கு எழும்பூர் வழியாக நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (0629) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 9.35 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு எழும்பூர் வழியாக நவம்பர் மாதம் 4-ந் தேதி மதியம் 2.55 மணிக்கு சிறப்பு ரயில் (0630) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

கோவையில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 2-ந் தேதி இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் (0622) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரயில் (0621) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6.50 மணிக்கு கோவையை வந்தடையும்.

நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு நவம்பர் மாதம் 7-ந் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் (0642) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் மாதம் 8-ந் தேதி மதியம் 2.40 மணிக்கு சிறப்பு ரயில் (0641) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 5.35 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.

சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடிக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரயில் (0619) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 10 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மதியம் 2.05 மணிக்கு சிறப்பு ரயில் (0620) இயக்கப்படுகிறது. இது மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மயிலாடுதுறை வழியாக நவம்பர் மாதம் 1-ந் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் (0646) இயக்கப்படுகிறது. மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.

மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு 4-ந் தேதி இரவு 10.45 மணிக்கு சிறப்பு ரயில் (0645) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் மாதம் 2-ந் தேதி மாலை 6.50 மணிக்கு சிறப்பு ரயில் (0635) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு நவம்பர் மாதம் 3-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் (0636) இயக்கப்படுகிறது. இது மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு மயிலாடுதுறை வழியாக நவம்பர் மாதம் 3-ந் தேதி இரவு 10.45 மணிக்கு சிறப்பு ரயில் (0661) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு விருத்தாசலம் வழியாக நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 4.45 மணிக்கு சிறப்பு ரயில் (0662) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நவம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6.55 மணிக்கு சிறப்பு ரயில் (0652) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து எர்ணாகுளத்திற்கு நவம்பர் மாதம் 5-ந் தேதி இரவு 8.35 மணிக்கு சிறப்பு ரயில் (0651) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் 8.05 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கின.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X