For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளில் நகர்ப்புற மக்கள் தொகை 60 கோடியை தாண்டும்!

Google Oneindia Tamil News

Train Crowd
டெல்லி: இந்தியாவில் நகர்ப்புறங்களி்ல் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அடுத்த 25 ஆண்டுகளில் 60 கோடியைத் தாண்டிவிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இப்போது நகர்ப் பகுதிகளில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 30 கோடியாக உள்ளது. இது, கடந்த 2001ம் ஆண்டில் 28.61 கோடியாக இருந்தது. 2035ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகும் என்று தெரிகிறது.

உலகளவில் பல்வேறு நாடுகளில் நகர்ப் புறங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை சராசரியாக 50 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இது இப்போது 28 சதவீதமாகவே உள்ளது. இந்த எண்ணிக்கை 25 ஆண்டுகளி்ல் இரண்டு மடஙகாகும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றால் நகரங்களை நாடி அதிகளவில் மக்கள் நகர ஆரம்பித்துள்ளதாக முகர்ஜி தெரிவித்தார்.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பில் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.

இப்போது தேசிய அளவி்ல் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் எண்ணிக்கை 393 ஆக உள்ளது. 50,000க்கும் அதிகமான மக்களைக் கொண்ட சிறிய நகரங்களின் எண்ணிக்கை 400ஆக உள்ளது.

இப்போது நம் நாட்டின் மக்கள் தொகை சுமார் 120 கோடியாகும். இது, உலகின் மொத்த மக்கள் தொகையில் 5ல் 1 பங்கு ஆகும். ஆனால், உலகின் மொத்த நிலப் பரப்பில் இந்தியாவின் பரப்பளவு வெறும் 4 சதவீதமே.

ஆனால், உலகில் 5 மனிதர்களில் ஒருவர இந்தியர் ஆவார்.

English summary
India"s urban population will more than double to over 600 million by 2035 as increasing number of people migrate to cities because of better infrastructure and employment opportunities. The next 25 years should see the urban population living in Indian towns and cities doubling," Finance Minister Pranab Mukherjee said at the National Convention of Confederation of Real Estate Developers" Associations of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X