For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஜி எம்பி ஜெயசீலன் சொத்து போலி ஆவணம் மூலம் வி்ற்பனை: 2 பேருக்கு வலைவீச்சு

Google Oneindia Tamil News

நாசரேத்: நாசரேத்தில் முன்னாள் எம்பியின் ரூ.25 லட்சம் மதிப்புள்ள சொத்து போலி ஆவணம் மூலம் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் 2 பேரை வலை வீசித் தேடி வருகின்றனர்.

நாசரேத்தைச் சேர்ந்தவர் ஏடிகே ஜெயசீலன். திமுக முன்னாள் எம்பியான இவருக்கு வெள்ளை மடத்தில் 7 ஏக்கர் 18 சென்ட் நிலம் உள்ளது. சில நாட்களுக்கு முன் இந்த நிலத்தில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என நாசரேத் பத்திர பதிவு அலுவலகத்தில் வில்லங்கம் பார்த்தார்.

அப்போது அவரது நிலத்தில் 2 ஏக்கர் 38 சென்ட் நிலம் போலி ஆவணம் மூலம் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 5 பேருக்கு விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இதைத் தொடர்ந்து ஜெயசீலன் நாசரேத் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ஜெயசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் ஜெயசீலன் சொத்திற்கு சின்னமதிகூடலைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் போலி ஆவணம் தயாரித்து கேரளாவை சேர்ந்த பிரதீப் என்பவருக்கு பவர் கொடுத்துள்ளார். அவர் 6 பேருக்கு அந்த சொத்தை விற்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பால்ராஜ், பிரதீப் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.

English summary
Former DMK MP Jeyaseelan's land worth Rs. 25 lakh was sold to 6 persons without his knowledge. A man named Palraj had prepared fake documents for the MP's land and gave power of attorney to Pradeep from Kerala. Pradeep sold the land to 6 persons. Police are in search of the duo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X