For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸை கிண்டலடித்தேனா...? - துரைமுருகன் விளக்கம்

By Shankar
Google Oneindia Tamil News

Durai Murugan
சென்னை: தொகுதிப் பங்கீட்டின்போது காங்கிரஸ் தேர்தல் குழுவை நான் கிண்டல் செய்ததாகக் கூறப்படுவது தவறான செய்தி என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இன்றைக்குக் காலையில் வெளிவந்த ஒரு வார ஏடு, அண்ணா அறிவாலயத்திற்கு தேர்தல் கூட்டணி பற்றி பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியின் குழுவினர் வந்த போது, நான் ஏதோ கிண்டலாகப் பேசியதாகவும், அதனால் காங்கிரஸ் தலைவர்கள் கோபமடைந்ததாகவும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதுபோல எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. நான் பேசியதாக அந்த ஏடு எழுதியிருப்பதைப் போல நான் பேசவும் இல்லை.

இதனை அந்தக் கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நன்கறிவார்கள். இன்னும் சொல்லப் போனால் அந்தக் குழுவினரைத் தவிர பேச்சுவார்த்தை நடைபெற்ற அறைக்குள் யாருமே வரவில்லை.

அப்படியிருக்க இந்தச் செய்தியாளர், உள்ளே நடைபெறாத சம்பவங்களையெல்லாம் நடைபெற்றதைப் போல கற்பனையாக ஒரு உரையாடலை எழுதி எப்படியாவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முனையாதா, அதனால் அம்மையாரின் ஜென்மம் சாபல்யம் அடையாதா என்று எண்ணுகின்றார்கள்.

அந்தச் செய்திகளைப் படித்து விட்டு அது உண்மையாக இருக்குமோ என்று யாரும் எண்ணி விடக்கூடாது என்பதற்காக இந்த விளக்கத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

காங்கிரஸ் குழுவினர் அண்ணா அறிவாலயம் வந்தபோது அந்த ஏட்டிலே எழுதியிருப்பது போன்ற வார்த்தைகளைப் பேசவும் இல்லை, கிண்டலும் செய்ய வில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்."

-இவ்வாறு அறிக்கையில் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

English summary
Minister Durai Murugan told that he never passed any negative comments on Congress election team during the talks of seat sharing. In his statement, he firmed that the congress leaders came for the talks knew this fact.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X