For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொழில்துறை வளர்ச்சி 3.7 சதவீதமாக வீழ்ச்சி!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய தொழில் துறை வளர்ச்சி வீதம் கடந்த ஜனவரி மாதம் வெறும் 3.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் இது 16.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைக்கு முக்கிய காரணம் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை கடுமையாக உயர்த்தியிருப்பதுதான் என்று வல்லுநர்கள் கருத்து கூறியுள்ளனர்.

ஆனால் இந்த நிலை நிரந்தரமல்ல. மீண்டும் கிடு கிடு வளர்ச்சிக்கு தொழில்துறை செல்லும் சூழல் உள்ளதாக டாயிச் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி வீதம் கடந்த 10 மாதங்களில் 8.3 சதவீதமாக உள்ளது. இதனை இரட்டை இலக்கத்துக்கு உயர்த்த முயன்று வரும் நேரத்தில், இப்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, சராசரி வளர்ச்சி வீதத்தையும் பாதிக்கும் சூழல் உள்ளது.

இப்போதுள்ள பணவீக்கம் மற்றும் எண்ணெய் சந்தை நெருக்கடி தொடர்ந்தால், இன்னும் மோசமான நிலை தோன்றக்கூடும் என்கிறார்கள்.

English summary
The country's industrial output slowed to 3.7% in January, dragged down by sluggish manufacturing sector and a sharp decline in capital goods. Remember, industrial output in January 2009 stood at 16.8%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X