For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பான்: 4வது அணு உலை வெடித்தது; பெருமளவு கதிர்வீச்சை உறுதி செய்த ஜப்பான்!

By Shankar
Google Oneindia Tamil News

Japan Fukushima Nuclear Power Plant
டோக்யோ: ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் நான்காவது உலையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, சில நிமிடங்களுக்கு முன் பெரும் சத்தத்துடன் அது வெடித்தது.

இதைத் தொடர்ந்து இந்த அணுசக்தி நிலையத்தின் ஊழியர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். ஃபுகுஷிமோவிலிருந்து 260 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த கதிர்வீச்சு பரவியுள்ளது. இது உயிருக்கு ஆபத்து விளைவித்தும் அளவுக்கு உள்ளதாக அரசுத் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோவிலும் கதிர்வீச்சு பரவியுள்ளதாகவும், மக்கள் பூட்டிய வீடுகளுக்குள் இருக்குமாறும் ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட நாசத்தை விட அதிகமான துயரத்தைச் சந்தித்துள்ளது ஜப்பான். பூகம்பம், சுனாமி போன்ற இயற்கைப்பேரிடர்களின் தாக்குதலிலிருந்து மீளும் முன்பே, அந்நாட்டின் அணு உலைகள் மூலம் அடுத்த பேராபத்து நேர்ந்துள்ளது.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாயிச்சி அணுசக்தி நிலையத்தின் மூன்று அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இந்த மூன்று அணுஉலைகளிலிருந்தும் வெளியேறும் ஹைட்ரஜன் ஜப்பானின் ஒரு பகுதியை முவுமையாக ஆக்கிரமித்துள்ளது. அணுஉலையின் துகள்கள் காற்றில் வேகமாகப் பரவி வருகின்றன.

முதலில் அணு உலையிலிருந்து 20 கிமீ தூரம் வரை குடியிருந்த மக்களை வெளியேறச் சொன்ன அரசு, இப்போது 40 கிமீ வரையுள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி வருகிறது.

இதுவரை 11 லட்சம் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புகலிடம் தேடிப் புறப்பட்டுள்ளனர்.

டோக்கியா வரை அணுக்கதிர் வீச்சு உணரப்பட்டுள்ளதாகவும், உடல் நலத்தைப் பாதிக்கும் அளவுக்கு கதிர்வீச்சின் அளவு அபாய கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் அரசுத் தரப்பிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. அணுக்கதிர் வீச்சிலிருந்து தற்காலிகமாகக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளும் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

4வது அணு உலை...

இந்த நிலையில், ஃபுகுஷிமாவின் நான்காவது அணு உலையில் பெரும் தீ ஏற்பட்டது. இதை அணைக்க முடியாமல் தவித்தனர் ஊழியர்கள். இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் பெரும் சத்தத்துடன் இந்த அணு உலை வெடித்துச் சிதறியது.

இதனால் ஃபுகுஷிமோ நகரமே வெப்பத்தில் தகிக்க ஆரம்பித்துள்ளது.

வெடித்த நான்கு அணு உலைகளிலிருந்தும் கதிர்வீச்சின் அளவு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவு பரவியுள்ளதாக ஜப்பான் அரசே அறிவித்துள்ளது.

மேலும், கதிர்வீச்சில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முதலுதவி செய்யும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது.

உதவுங்கள்....

இந்த நெருக்கடியைச் சமாளிப்பது மிக சவாலாக உள்ளதாகவும், அமெரிக்கா தனது ராணுவத்தை அனுப்பி உதவ வேண்டும் என்றும் ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா அதிர்ச்சி...

ஃபுகுஷிமா டாய்ச்சியிலிருந்து பரவும் அணுக்கதிர் வீச்சு, மியாமி வரை உணரப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கதிர்வீச்சின் முதல் தாக்கம் மியாமியில் தரையிறங்கு முன் விமானத்தில் உணரப்பட்டதாகவும், இது 2 புள்ளிகள் வரை இருந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விஞ்ஞானிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

English summary
The fourth reactor of Japan's Fukushima Daiichi nuclear plant is now in danger. There is a big fire blow in this reactor and an explosion is expected here, as Japanese cabinet secretary announced earlier this day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X