For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமி பாதிப்பு-இறங்கிய ரப்பர் விலை ஏறுமுகம்: வியாபாரிகள் மகிழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

திற்பரப்பு: ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் இறங்கு முகத்தில் இருந்த ரப்பர் விலை தாய்லாந்து அரசின் அதிரடி நடவடிக்கையால் ஏறுமுகமாக உள்ளது.

குமரி மாவட்ட மக்களி்ன் முக்கிய பயிரான ரப்பர் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்தது. சாதாரண லால் சீட் ரூ.250க்கும், கிரேடு சீ்ட்டுகள் சுமார் ரூ.300க்கும் விற்கப்பட்டது. சர்தேச சந்தையில் ரப்பரின் விலை உயர்ந்ததாலும், இயற்கை ரபபரின் தேவை அதிகரித்ததாலும் இந்த அளவுக்கு விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் ரப்பர் உற்பத்தி குறைவாக உள்ளதாலும், ரப்பரின் விலை ரூ.350ஐ தாண்டும் என கூறப்பட்டது. ரப்பரின் விலை அதிகரித்ததால் மாவட்டத்தில் ரப்பர் பயிரிட தகுதியில்லாத இடங்களிலும் ரப்பர் பயிரிடப்பட்டது.

வயல்வெளிகளும், தென்னை தோட்டங்களும் ரப்பர் தோட்டங்களாக மாறின. உலக அளவில் அதிகமாக ரப்பர் கொள்முதல் செய்யும் ஜப்பான் சுனாமி பாதிப்பை சந்திந்துள்ளதால் ரப்பர் விலை குறைந்தது. இதனால் ஏறுமுகத்தில் காணப்பட்ட ரப்பரி்ன் விலை கடந்த ஒருவாரமாக இறங்குமுகத்தில் உள்ளது. தொடர்ந்து விலை இறங்குவதால் வியாபாரிகள் ரப்பர் வாங்குவதை தவிர்த்துள்ளனர். இதனால் ரப்பர் வியாபாரிகள் கையிருப்பில் வைக்க துவங்கினர். இவ்வாறு தேங்கும்போது அதிகளவு தேவைப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள்.

எனவே அதிகளவு கையிருப்பை கட்டுப்படுத்தும் வகையில், தாய்லாந்து் அரசு மானியம் வழங்க முன்வந்தது. இதனால் ரப்பரி்ன் விலை உலக மார்க்கெட்டில் ஒரே நாளில் கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரித்து சுமார் 190 ரூபாய்க்கு நேற்று விற்கப்பட்டது.

English summary
Rubber is the main crop of Kanyakumari district. Japan is the largest importer of rubber. Since, Japan is devastated by tsunami, rubber price keeps falling day by day. Now the price has started increasing because of Thailand government's announcement of giving subsidy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X