For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன்!-தேர்தல் ஆணையம் உத்தரவு

By Shankar
Google Oneindia Tamil News

மதுரை : தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில், மாவட்டம் தோறும் தேர்தலை கண்காணிக்க ஒரு ஐ.ஜி. என்ற அடிப்படையில் வெளி மாநில ஐ.பி.எஸ். அதிகாரிகளை வரவழைத்துள்ளது செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

மேலும், திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பல்வேறு புகார்களுக்கு ஆளான உளவுப்பிரிவு துறை கூடுதல் டி.ஜி.பி. ஜாபர் சேட்டை மேற்கு வங்க தேர்தல் பார்வையாளராக மாற்றியது. அவர் அதை ஏற்க மறுத்த பட்சத்தில் அவருக்கு நீண்ட விடுப்பு கொடுத்து அனுப்பிவைத்தது.

இந்த நிலையில், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்க 3 பேர் கொண்ட பட்டியலை அனுப்பும்படி, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது.

அதன் பேரில், கூடுதல் டி.ஜிபிக்களான காந்திராஜன், சஞ்சீவ் குமார், டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதில், உளவுத்துறை கூடுதல் டிஜிபி பதவிக்கு டி.கே.ராஜேந்திரனை நியமித்துள்ளதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர் உடனடியாக இந்தப் பொறுப்பை ஏற்கிறார்.

English summary
High level sources revealed that the election commission is finalising the name of T K Rajendiran for the post of Tamil Nadu intelligence wing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X