For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா-பாக். கிரிக்கெட் தொடர்: உயிர் கொடுக்க அரசு முடிவு

Google Oneindia Tamil News

SM Krishna
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவைப் புதுப்பிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவு துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் மொஹாலியில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அரை இறுதிப் போட்டியைக் காண வருமாறு பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று அவரும் வந்திருந்தார். அப்போது இரு நாடுகளும் மீண்டும் பழையபடி கிரிக்கெட் போட்டிகளில் ஆட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார் கிலானி.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவைப் புதுப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கான பூர்வாங்கப் பணிகளைச் செய்யுமாறு பாகிஸ்தான் அரசும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் தான் தன்னைக் கேட்டுக் கொண்டதாக ராணாவும் அமெரிக்க கோர்ட்டில் தெரிவித்த அடுத்த சில மணி நேரங்களில் இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து வரும். அதேசமயம், கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம் தொடரும். மும்பை தாக்குதலுக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். அது உறுதி. அதற்கான முயற்சிகளை இந்திய அரசு தொடர்ந்து செய்து வரும் என்றார் அவர்.

English summary
Is India being too accommodating to Pakistan and expecting to renew ties despite the continued hostility? It appears to be the case as India has decided to restart cricketing ties with Pakistan that had been snapped of after the 26/11 Mumbai attacks. The decision to resume the cricketing ties was announced by External Affairs minister S M Krishna on April 13. The minister said, "Peace talks will go on, cricket matches will go on and simultaneously, our relentless efforts will continue to bring to justice all those responsible for the heinous crime against India in Mumbai."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X