For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்செக்ஸ் 296 புள்ளிகள் வீழ்ச்சி!

By Shankar
Google Oneindia Tamil News

மும்பை: சர்வதேச அளவில் வர்த்தக நிலை தேக்கமடைந்துள்ளதையடுத்து இந்திய பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது.

இன்று ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 296 புள்ளிகளை இழந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை 310 புள்ளிகளை இழந்திருந்தது சென்செக்ஸ். இன்று வர்த்தகம் தொடங்கியதும், சரிவும் தொடங்கியது. இதன் விளைவு பங்குச் சந்தை வர்த்தக முடிவில் 19,091.17 ஆக சென்செக்ஸ் நிலைப் பெற்றது.

தேசிய பங்குச் சந்தை நிப்டி 95.45 புள்ளிகள் சரிந்து 5,729.10 ல் முடிந்தது. ஐடி துறை பங்குகள் விலை மிகவும் குறைந்ததும் இந்த நிலைக்குக் காரணமாக அமைந்தது.

ஆசியாவின் இதர பங்குச் சந்தைகளிலும் இதே வீழ்ச்சிப் போக்கு காணப்பட்டது.

பங்கு வர்த்தகத்தில் தொழில்நுட்பத் துறைப் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இன்போஸிஸ் தவிர, டிசிஎஸ் பங்குகள் 3.43 சதவீதம் சரிந்தது. எச்டிஎப்சி பங்குகள் 1.89 சதவீதம் சரிவுக்குள்ளாகியது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் 0.81 சதவீதம் சரிவுக்குள்ளானது.

இந்த வீழ்ச்சிக்கு ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடியும் ஒரு முக்கியக் காரணம் என பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Erasing initial gains, the BSE Sensex today dropped about 296 points to 19,091 in a volatile session on funds selling fundamentally strong stocks led by Infosys Technologies amid a weak global trend. Besides, Asian trend and European openings were weak on mounting inflation around the globe amid Europe's sovereign debt crisis rearing head again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X