புதிய ஒப்பந்தம் மூலம் கறுப்பு பண பிரச்சினைக்கு தீர்வு: பிரணாப் முகர்ஜி நம்பிக்கை

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இந்த பிரச்சினையில் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக கண்டித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று டெல்லியில் நடைபெற்ற வருமான வரி தொடர்பான மாநாட்டில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார்.
அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், கறுப்பு பணத்தை வெளிக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் வருமான வரித்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "பல்வேறு நாடுகளுடன் உள்ள இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில், வங்கி கணக்கு விவரம் மற்றும் வருமான வரி தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள வகை செய்யும் சட்டப்பிரிவு ஒன்றை இணைத்து திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கையினால், வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பண பிரச்சினைக்கு வருமான வரித்துறை மூலம் தீர்வு காண முடியும். 40 நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படும் மான் தீவு, பெர்முடா மற்றும் பகாமாஸ் நாடுகளில் உள்ள வங்கிகளிடம் இருந்து கறுப்பு பணம் பற்றிய தகவல் பரிமாற்றத்துக்கும் வகை செய்யப்பட்டு உள்ளது.
ரூ.33 ஆயிரம் கோடி தடுப்பு
ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்குப்பிறகு, மேலும் 20 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளன.
அத்துடன் மாற்று விலை நிர்ணய திட்டத்தை வலுப்படுத்தியதன் மூலம் 33 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தவறான வழிமுறைகளில் வெளி நாடுகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது'', என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications