லோக்சபாவில் குறட்டை விட்டுத் தூங்கிய லாலு பிரசாத்-தட்டி எழுப்ப உத்தரவிட்ட சபாநாயகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Lalu Prasad Yadav
டெல்லி: லோக்சபாவில் படு சூடாக விவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் குறட்டை விட்டுத் தூங்கினார் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ். லாலுஜி எழுந்திருங்க என்று கூறி அவரை எழுப்ப முயன்று தோல்வி அடைந்த சபாநாயகர் மீராகுமார், அருகில் இருந்த உறுப்பினரை அழைத்து லாலுவை எழுப்பச் சொன்னார்.

இன்றுதான் இந்தக் கூத்து நடந்தது. முதல் வரிசையில் சபாநாயகருக்கு எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார் லாலு. அப்போது அவையில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. படு சூடான விவாதத்திற்கு மத்தியில் சைலன்ட்டாக குட்டித் தூக்கத்திற்குப் போய் விட்டார் லாலு. இதைப் பார்த்த சபாநாயகர் மீரா குமார், லாலுவை எழுந்திருக்குமாறு கூறினார். ஆனால் லாலு காதுகளை அது அடையவில்லை. அப்படி ஒருதூக்கத்தி்ல இருந்தார் தலைவர். இதைப் பார்த்த மீரா குமார் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த அவரது கட்சி எம்.பி. உமாசங்கர் சிங்கை அழைத்து, உங்கள் தலைவரை எழுப்புங்கள் என்றார்.

இதையடுத்து உமாசங்கரும், லாலுவின் தோளைத் தட்டி எழுப்பினார்.சடாரென விழித்துப் பார்த்த லாலு, தான் கையும் களவுமாக பிடிபட்டதை உணர்ந்து வெட்கச் சிரிப்புடன் நெளிந்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Bihar Chief Minister and RJD leader, Lalu Prasad Yadav was caught napping during the Parliament's monsoon session 2011 on Friday, Sep 2. It seems that after failing to wake him up, speaker Meira Kumar urged Lalu's party colleague, Umashankar Singh for awakening the former Bihar CM from his nap. Citing the request from the speaker, "Umashankarji, please wake him up", Lalu's aide reportedly tapped him on his shoulder pointing that the Speaker had noticed him.
Please Wait while comments are loading...