For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முறைகேட்டில் ஈடுபட்ட 5 ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கம்: திண்டுக்கல் கலெக்டர் அதிரடி

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடு மற்றும் பல்வேறு புகார்களுக்கு ஆளான 5 ஊராட்சி தலைவர்களை பதவி நீக்கம் செய்து, மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் ஒன்றியம், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவர் ஜி.வசந்தா, பெரியகோட்டை ஊராட்சி தலைவர் கே.குருசாமி, நிலக்கோட்டை ஒன்றியம் பச்சைமலையான்கோட்டை ஊராட்சி தலைவர் மு.மஞ்சுளா, சாணார்பட்டி ஒன்றியம் மடூர் ஊராட்சி தலைவர் எஸ். ஜான் பீட்டர், கொடைக்கானல் ஒன்றியம் வில்பட்டி ஊராட்சி தலைவர் எஸ். செல்வராஜ் ஆகியோர் இருந்தனர்.

இவர்கள் மீது ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடு, விதிமுறை மீறல்கள், ஊராட்சி நிதிக்கு இழப்பு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு புகார்கள் இருந்து வந்தது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் நாகராஜன் விசாரித்தார். இதில் அவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அனைவரையும் பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டார்.

English summary
Dindigul district collector Nagarajan has ordered to dismiss 5 Panchayat presidents. Previously collector made investigation and came to know that the abuse petitions about them are true.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X