மத்திய அரசில் நம்பர் 2 யார் என்பதில் காங்கிரஸில் இப்போது சண்டை-அத்வானி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Advani
புவனேஸ்வர்: மத்திய அரசில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அடுத்து யார் என்பதில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடே, பிரதமர் வெளிநாட்டுக்குப் போகும்போது பிரணாப் முகர்ஜி அல்லது ப.சிதம்பரம் ஆகியோரில் ஒருவர் பிரதமரின் பணிகளைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று ஒரிசா மாநலிம் சம்பல்பூரில் நடந்த ரத யாத்திரையின்போது அத்வானி பேசுகையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு நிகராக தற்போது ப.சிதம்பரத்தை தரம் உயர்த்தியுள்ளனர். இதன் மூலம், திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான 2ஜி வழக்கை உடைத்துத் தகர்க்கும் முயற்சி நடப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்த நாள் முதலே, சோனியாவுக்கு அடுத்து யார் தலைவர் என்ற கேள்வி விடை தெரியாமலேயே இருந்து வருகிறது. இந்த கேள்விக்கு இதுவரை காங்கிரஸில் விடை இல்லை. இப்போது நம்பர் 2 யார் என்பதில் புதிய கேள்விக்குறியை போட்டுள்ளது மத்திய அரசு.

ப.சிதம்பரத்தையும், பிரணாப் முகர்ஜியையும் ஒரே தட்டில் வைத்துள்ளார் பிரதமர். இதன் மூலம் நிதியமைச்சரின் பதவிக்குரிய மரியாதையை அவமதித்துள்ளார் பிரதமர். காரணம், லோக்சபாவில் அவை முன்னவர் நிதியமைச்சர்தான். அப்படி இருக்கையில் பிரதமருக்கு அடுத்த இடம் அவருக்குத்தான். லோக்சபாவில் மட்டுமல்ல, அரசிலும் கூட பிரதமருக்கு அடுத்த இடம் நிதியமைச்சருக்குத்தான். ஆனால் ப.சிதம்பரத்தையும், பிரணாபுக்கு நிகராக கொண்டு வந்து, நிதியமைசச்ர் மற்றும் அவை முன்னவர் பதவியை அவமதித்துள்ளனர் என்று கூறியுள்ளார் அத்வானி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Senior BJP leader LK Advani on Monday said the “formal promotion” of home minister P Chidambaram to parity status with finance minister Pranab Mukerjee was a desperate attempt to thwart probe against him in the 2G spectrum scam after the indictment of DMK ministers. Talking to reporters in Sambalpur, before resuming his Jan Chetna Yatra, Advani said: “Since the inception of the UPA government, there had been a question mark over who is No.1 – Prime Minister Manmohan Singh or Congress president Sonia Gandhi, though there had been any doubt about the answer. But now a question mark had been placed even over who is No.2 in the government.”
Please Wait while comments are loading...