For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலியல் வழக்கு: ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படும் விக்கிலீக்ஸ் அதிபர் அஸ்ஸாஞ்சே

By Siva
Google Oneindia Tamil News

Julian Assange
லண்டன்: விக்கலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸ்ஸாஞ்சே தன்னை இங்கிலாந்து போலீசார் ஸ்வீடனுக்கு நாடு கடத்தாமல் இருக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை லண்டன் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸ்ஸாஞ்சே கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு சென்றார். அப்போது அவர் இரண்டு பெண்களை பாலியில் பலாத்காரம் செய்ததாக அந்த பெண்களே புகார் தெரிவி்த்தனர்.

இதையடு்தது அஸ்ஸாஞ்சே மீது ஸ்வீடன் நாட்டில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடு்தது அஸ்ஸாஞ்சேவுக்கு கைது வாரண்ட்டும் ஸ்வீடனில் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் லண்டன் சென்ற அஸ்ஸாஞ்சே போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை ஸ்வீடனுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடந்து வந்தன. இதையடுத்து அவர் தன்னை ஸ்வீடனுக்கு நாடு கடத்தக் கூடாது என்று கூறி லண்டன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இன்னும் 10 நாட்களில் அஸ்ஸாஞ்சே ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுகிறார்.

40 வயது ஆஸ்திரேலியரான அஸ்ஸாஞ்சேவின் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட தகவல்களால் பல நாட்டு அரசாங்கங்கள் ஆட்டம் கண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Wikileaks founder has lost his appeal against extradition to Sweden from Britain over sexual crimes. Assange will be extradited to Sweden within 10 days. He was arrested in London in last december.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X