For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்னா ஹசாரே குழு மாற்றப்படுகிறது- இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: இளைஞர்கள், சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தனது குழுவை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

ஜன்லோக்பால் மாசோதாவிற்காக போராடி வரும் அன்னா ஹசாரேவின் குழுவினர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் அந்த குழுவை மாற்றி அமைக்க அன்னா ஹசாரே முடிவு செய்துள்ளார்.

தனது குழுவில் உள்ள முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த ஹசாரே, லோக்பால் இயக்கத்தால் அச்சமடைந்திருப்பவர்கள்தான் தனது ஆதரவாளர்களையும், உதவியாளர்களையும் தாக்கி குழுவை உடைக்க முயன்று வருகின்றனர் எனக் குற்றம்சாட்டினார்.

ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை வலுப்படுத்தும் வகையில் புதிதாக குழு மாற்றி அமைக்கப்படும் என்று ஹசாரே கூறியுள்ளார். அந்த புதிய குழுவில் சிறுபான்மையினர், பழங்குடியினர், தலித்துகள் மற்றும் இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

யாருக்கு அதிகாரம் போக உள்ளதோ, யாருக்கு வருமானம் தடைபட உள்ளதோ அவர்கள்தான் நமது குழுவை உடைக்க முயற்சிக்கின்றனர் என்றும் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

English summary
With his team rocked by controversies, Anna Hazare on Monday said he plans to restructure his core committee to also give representation to religious minorities, tribals, dalits and youths to strengthen the campaign against corruption.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X