For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துவாரகா- தூத்துக்குடி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: துவாரகாவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

துவாரகாவில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இனி மதுரை வரை இயக்கப்படும். துவாராகாவில் இருந்து இன்று இரவு 12.30 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்(19568), மதுரைக்கு வரும் 21ம் தேதி வந்தடையும். எக்ஸ்பிரஸ் ரயில்(19567) மதுரையில் இருந்து 21ம் தேதி அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு, 23ம் தேதி இரவு 12.50 மணிக்கு சென்றடையும். இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று துவங்குகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு (06007) என்ற அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் ஒருமுறை செவ்வாய் கிழமை மட்டும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் 22ம் முதல் 2012ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி வரை இயக்கப்படுகிறது. அதன்படி சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

கொல்லத்தில் இருந்து வாராந்திர ரயில் (06008) வரும் 23ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 18ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் வாரம் தோறும் கொல்லத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (06617) இரவு 8.20 மணிக்கு புறப்படுவதுக்கு பதிலாக இரவு 10.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 6.40 மணிக்கு சென்றடைவதற்கு பதிலாக, காலை 10 மணிக்கு சென்றடையும், என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

English summary
Southern railways announced the a change in Dhuvaraka- Tutucorin weekly train schedule. As per the announcement, the train's operation will be shortened to Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X