For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அது வெறும் காலி டப்பா - மத்திய அரசின் லோக்பால் பற்றி அன்னா குழு கமென்ட்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி : மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ள லோக்பால் மசோதா ஒன்றுமே இல்லாத வெறும் காலி டப்பா என்று அன்னா ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டுமெனில் லோக்பால் வரம்பிற்குள் குரூப் சி, குரூப் டி அரசு ஊழியர்கள் உட்பட அனைவரையும் கொண்டு வரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சாதாரண மக்களுக்கும் பயன்தரக்கூடிய ஜன்லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசின் வலுவற்ற லோக்பால் மசோதாவை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார் அன்னா ஹஸாரே.

இந்த நிலையில் நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் மீண்டும் லோக்பால் மசோதா குறித்த கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் குளிர்காலக் கூட்டத் தொடருக்குள் ஜன்லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த நாள் முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்க குதிப்பேன் என்று அன்னா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜன் லோக்பால் மசோதா

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ., நீதித்துறை,குரூப்சி, குரூப் டி அசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு லோக்பால் வரம்பிற்குள் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அன்னா ஹசாரே குழு அனைவரையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசு ஊழியர்கள் பெறும் லஞ்சத்தினால் சாதாரண மற்றும் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். எனவே அனைவருமே லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவரப்படவேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல சிபிஐ அமைப்பை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வந்து தீரவேண்டும் என்று அன்னா ஹசாரே குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். ஏனெனில் லோக்பால் அமைப்பு ஒரு போஸ்ட் ஆபிஸ் போன்றதுதான் புகாரைப் பெற்று சிபிஐக்கு அனுப்புவதும், சிபிஐ அளிக்கும் அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்புவதும் லோக்பால் அமைப்பின் பணி என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல் குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்யும் நீதிபதிகளையும் கண்டிப்பாக லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும் என்றும் ஊழலுக்கு எதிரான குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

English summary
Accusing the government of reducing the proposed Lokpal to an "empty tin box with no powers", Team Anna on Monday said they were surprised at the move to exclude Citizen's Charter and lower bureaucracy from the ambit of the ombudsman, contrary to a Parliament resolution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X