For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர் மழை-கோவில்பட்டியில் பல கோடி ரூபாய் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்

Google Oneindia Tamil News

Matchbox
கோவில்பட்டி: தொடர் மழை காரணமாக கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், சுற்றுவட்டரப் பகுதிகளிலும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள சீதோஷ்ணநிலையினால் குடிசைத் தொழில் போல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இத்தொழில் விளங்கி வருகிறது.

தீப்பெட்டி தொழில் பாதிப்பு

கடந்த ஒரு மாதகாலமாக விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். உற்பத்தியான தீப்பெட்டி பண்டல்களும் ஏற்றுமதி ஆகாமல் தேக்கமடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல கோடி தீப்பெட்டிகள் தேக்கம்

கந்தகத் தொழில் எனப்படும் தீப்பெட்டி தொழிலுக்கு மழை சீசன் என்றாலே அலர்ஜியான விஷயமாகும். ஏனெனில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் மீது ஈரக்காற்று பட்டாலே பயனற்று போகும் நிலை ஏற்படுமென இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நான்கு நாட்கள் பெய்த தொடர் மழையினால் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பண்டல்கள் தேக்கமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக தீப்பெட்டி பண்டில்களை ஏற்ற முடியாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள லாரிகள் அனைத்தும் பெட்ரோல் பங்குகள், லாரி ஷெட்கள், என ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

English summary
Match industry is at receiving end due to the continuous rain in Koivilpatti. Match box parcels worth crores of rupees are stagnant in the godowns. Producers are worried over the loss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X