For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப் பெரியாறு விவகாரம்- மத்திய அரசுக்கு கேரளா ஒருமாதம் கெடு!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு மாதத்திற்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று கேரளா மாநில நிதியமைச்சர் கே.எம்.மாணி கெடு விதித்துள்ளார்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டவேண்டும் என்பது கேரள அரசின் முடிவு. இதற்கு தமிழகம் பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை நீர்மாட்டத்தை 136 அடிவரை தேக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று கேரளா முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் அனைத்து கட்சியினரும் சந்தித்து மனு அளித்தனர்.

ஒரு மாதம் கெடு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள காங்கிரஸ் (எம்) தலைவரும் நிதி அமைச்சருமான கே.எம். மாணி முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக எங்களுக்கு புதிய அணை வேண்டும். அதற்கு அனுமதி அளிக்க மன்மோகன்சிங்குக்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்கிறோம் என்றார். இந்த விஷயத்தில் காலவரையறை இல்லாமல் காத்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
Stepping up pressure, a key ally of Congress in Kerala Wednesday set a one-month deadline for Prime Minister Manmohan Singh to amicably settle the Mullaperiyar Dam dispute between the state and Tamil Nadu. Kerala Finance Minister and leader of Kerala Congress (M) K M Mani said his party could not wait "indefinitely" seeking a solution to the problem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X