For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலா ஆதரவு பெற்ற அதிமுக அமைச்சர்கள் வீடுகள், அலுவலங்களில் அதிரடி ரெய்டு

Google Oneindia Tamil News

மதுரை: சசிகலாவின் ஆதரவு பெற்ற அதிமுக அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தி பல ஆவணங்கள் கைப்பற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலா குடும்பத்தினரை தமிழக முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். அதனையடுத்து சசிகலா ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அதிமுகவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் சசிகலா ஆதரவாளர்கள் குறித்து உளவுப்பிரிவு ரகசியமாக கண்காணித்து வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் சசிகலாவின் ஆசிப் பெற்ற அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்கள், அவர்களின் பினாமிகளின் வீடுகள், தோட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் விஜிலென்ஸ் போலீசார் இரவு நேரங்களில் திடீர் சோதனை நடத்தியதாக கூறப்படுகின்றது.

இதற்காக பல அமைச்சர்களை சென்னையில் தங்கி இருக்குமாறு அதிமுக தலைமை உத்தரவிட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த அதிரடி சோதனையின் போது சில அமைச்சர்களின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதில் ஒரு இளம் அமைச்சரின் சர்ச்சைக்குரிய திருமணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

English summary
ADMK ministers houses were raided yesterday. In this raid some important documents were seized from the ministers, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X