For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறிவியல் வளர்ச்சி: இந்தியாவை சீனா தோற்கடித்துவிட்டது- மன்மோகன் சிங்

By Chakra
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: அறிவியல் வளர்ச்சியில் இந்தியாவை சீனா தோற்கடித்துவிட்டது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

புவனேஸ்வரில் 99வது இந்திய அறிவியல் மாநாட்டைத் துவக்கி வைத்து அவர் பேசுகையில், அறிவியல் தொழில்நுட்பத்துறையில் ஆராய்ச்சிகளுக்காக செலவிடப்படும் தொகையை நாம் இரட்டிப்பாக்க வேண்டும்.

இப்போது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) 1 சதவீதம் தான் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இதை 2017ம் ஆண்டுக்குள் 2 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவை சீனா விஞ்சிவிட்டது.

உணவு, எரிசக்தி தட்டுப்பாடுகளை நீக்குவது, நீர் மேலாண்மை ஆகியவை குறித்த ஆராய்ச்சிகளை நாம் அதிகப்படுத்த வேண்டும். அரசும் தனியார் தொழில்துறையினரும் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 15,000 பேர் பங்கேற்றுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து 20 நோபல் பரிசு வென்றவர்கள் உள்ளிட்ட 500 விஞ்ஞானிகளும் பங்கேற்றுள்ளனர்.

English summary
Prime Minister Manmohan Singh on Tuesday inaugurated the 99th Indian Science Congress in Bhubaneswar said that there is a need to double the investment in science by 2017. "India must raise spending in scientific research and development to at least 2% of GDP by end of 12th Five year plan from current about 1%," Singh said. "India must ensure enhanced investment in scientific research and development by involving industries. There should be public-private partnership in research," the Prime Minister said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X