For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புத்தாண்டில் தமிழகத்தில் ரூ.150 கோடி மது விற்பனை: விற்பனையில் சாதனை

Google Oneindia Tamil News

நெல்லை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தமிழகத்தில் ரூ.150 கோடிக்கு மது விற்றுள்ளது. அதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் ரூ.2.30 கோடிக்கு மதுவகைகள் விற்பனையாகின.

தமிழகத்தில் சாதாரண நாட்களை காட்டிலும் பண்டிகை காலங்களில் மது விற்பனை சக்கை போடு போடும். 2012 புத்தாண்டையொட்டி மாநிலம் முழுவதும் ரூ.150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 225 கடைகள் செயல்பட்டு வருகின்றன. சாதாரண நாட்களில் ரூ.1.50 கோடி முதல் ரூ.1.75 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும் நிலையில் புத்தாண்டு அன்று ரூ.2.30 கோடிக்கு மதுபானங்கள் விற்று தீர்ந்தன.

இதன் மூலம் மற்ற நாட்களை விட புத்தாண்டன்று விற்பனை 35 சதவீதம் அதிகரி்த்தது. அடுத்த இலக்காக வரும் பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ரூ.3 கோடி என்ற அளவிலும், மாநில அளவில் ரூ.175 கோடி என்ற அளவிலும் மது விற்பனையை அதிகரித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி அடுத்த வாரம் அனைத்து கடைகளிலும் முழு அளவு சரக்கு இருப்பு வைக்க அனைத்து மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்களுக்கு கூடுதல் சரக்குகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

English summary
TN liqour shops have sold liquor worth Rs.150 crore ahead of new year celebrations. It is expected that this sales will touch Rs.175 crore during Pongal festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X