For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கின்னஸ் சாதனைக்காக கரூரில் பிரமாண்ட ரங்கோலி கோலம்

Google Oneindia Tamil News

கரூர்: புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கரூரில் பிரமாண்டமான ரங்கோலி கோலம் உருவாக்கப்பட்டது.

கரூரில் வேலம்மாள் வித்யாலயா மற்றும் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில், புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலம் இடும் போட்டி நடைபெற்றது.

இதில் கின்னஸ் உலக சாதனை முயற்சியாக 220 மாணவ, மாணவியர் 15 டன் கோலப்பொடி, 5 டன் மணல் ஆகியவை கொண்டு 1 லட்சத்து 110 சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட ரங்கோலி கோலம் வரைந்து சாதனை படைத்தனர். இதை வரைய சுமார் 4 மணி நேரத்திற்கும் அதிகமானது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வித்தக கவிஞர் பா.விஜய் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் முனைவர் ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றமும், நாட்டுப்புற கலைமாமணி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

English summary
Velammal vidyalaya and Velammal matriculation school students have drawn a gigantic rangoli using 15 tonne colour powder in 1 lakh 110 square feet area to set guinness world records. The school kids have drawn this as an attempt to create awareness about global warming.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X