For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பசுபதி பாண்டியன் கொலைக்கு கண்டனம்: நெல்லை அருகே காமராஜர் பேனர் கிழிப்பு-போலீஸ் குவிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Pasupathi Pandian
நெல்லை: நெல்லை அருகே காமராஜர் படம் பொறித்த பேனரை கிழித்து கொடி கம்பத்தை தூக்கிச் சென்ற 14 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லையை அடுத்த தாழையுத்து அருகேயுள்ள கீழதென்கலம் சர்ச் தெருவில் காமராஜர் படம் பொறிக்கப்பட்ட பேனர் மற்றும் கொடி கம்பம் உள்ளது. அதிகாலை சில மர்ம நபர்கள் குடித்து விட்டு காமராஜர் படத்தை கிழித்து எறிந்து அங்கிருந்த கொடி கம்பத்தை தூக்கிச் சென்றனர். இது குறித்து கீழதென்கலம் தலையாரி கண்ணையா தாழையூத்து போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கீழதென்கலத்தைச் சேர்ந்த ரமேஷ், பிச்சையா, கருப்பசாமி, மணிகண்டன், செல்வம், முருகன், முத்துகுமார், அசோக், சின்னத்துரை உள்ளிட்ட 14 பேர தேடி வருகின்றனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து காமராஜர் பேனரை கிழித்தும், கொடி கம்பத்தை தூக்கிச் சென்றதாக தெரிய வந்தது.

சம்பவம் நடந்த இடத்தில் இரு தரப்பினரும் இடையே ஏதேனும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Kamarajar baner has been torn and the flag mast has been stolen by some miscreants near Tirunelveli. Police have filed a case and are in search of 14 persons. It is found out that they have done so to condemn Pasupathi Pandian's murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X