For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்பாக்ஸை திறந்து கூட பார்க்காத காங். எம்.பி. ராமசுப்பு-மெயில் அனுப்பினால் திரும்புகிறது!

Google Oneindia Tamil News

MP Raamasubbu
சென்னை: திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்புவின் இமெயில் முகவரிக்கு மெயில் அனுப்பினால் அது திரும்பி வருகிறது. எம்.பியின் இன்பாக்ஸ் நிரம்பி வழிவதே அதற்குக் காரணம். இன்பாக்ஸை அவர் திறந்து பார்த்து ரொம்ப நாளாவது போலத் தெரிகிறது.

நெல்லைத் தொகுதி காங்கிரஸ் எம்.பியாக இருப்பவர் ராமசுப்பு. ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர்.இவர் தனக்கென 'அருமையான' இணையதளம் ஒன்றை வைத்துள்ளார். அதில் தனது தொகுதி குறித்தும், தனது பணிகள் குறித்தும் நிறையப் போட்டு வைத்துள்ளார். அதில் எல்லாமே ரொம்பப் பழைய தகவல்களாக உள்ளன என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

குறிப்பாக நிகழ்ச்சி நிரல் பகுதியில் 2009ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி ராகுல் காந்தி நெல்லை வந்து போனது மட்டுமே இருக்கிறது. அதுதான் கடைசியாக அவர் 'அப்டேட்' செய்த நிகழ்ச்சி நிரலாகும். ஒருவேளை அதற்குப் பிறகு நெல்லையில் இவர் சம்பந்தப்பட்ட எதுவுமே நடக்கவில்லையா என்று தெரியவில்லை.

நிகழ்ச்சிகள், செய்திகள் என்ற பகுதிக்குள் போனால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் களக்காடு பகுதியில் குறை கேட்ட செய்தி குறித்த கிளிப்பிங்குளைத்தான் ஒட்டி வைத்துள்ளார். ஒரு வேளை அதற்குப் பிறகு இவர் குறைகளையே கேட்கவில்லையா என்று தெரியவில்லை.

அதேபோல நாடாளுமன்ற செயல்பாடு என்ற பகுதிக்குள் போய் பார்த்தால், 2009ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி அவர் பேசியது குறித்த தகவல் மட்டுமே உள்ளது. ஒருவேளை அதற்குப் பிறகு அவர் பேசவே இல்லையா என்பது தெரியவில்லை.

திட்டங்கள் என்ற பகுதிக்குப் போய் பார்த்தால், அதில் எதுவுமே இல்லை, 'பிளாங்க்' ஆக உள்ளது அந்த பக்கம். ஒருவேளை தனது தொகுதிக்கு எந்தத் திட்டமும் இல்லை என்பதை மறைமுகமாக சொல்கிறாரா அல்லது இவர் இன்னும் எதையும் திட்டமிடவில்லையா என்பது தெரியவில்லை.

புகைப்படங்கள் பகுதிக்குப் போய்ப் பார்த்தால் அங்கும் பழைய போட்டோக்கள்தான் உள்ளன. அதாவது கடந்த திமுக ஆட்சியின்போது நடந்த நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்கள்தான் அதிகம் உள்ளன.

'ஆன்லைனுக்கு' வந்து விட்டால் எல்லாமே 'ஆன்' ஆகத்தான் இருக்க வேண்டும். ஆனால் நமது நெல்லை எம்.பி. இப்படி 'ஆப்' ஆக இருப்பது ஏன் என்று அவருக்காக கை வலிக்க மின்னணு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தி வாக்களித்த வாக்காளர்கள் கேட்கிறார்கள்.

அதை விட முக்கியமானது, அவருக்கு ஏதாவது குறை சொல்லி, நிவர்த்தி கோரி மெயில் அனுப்பலாம் என்றால் மெயில்கள் அனைத்தும் நமக்கே திரும்பி வருகின்றன (அதை டெஸ்ட் செய்து விட்டுத்தான் இந்த செய்தியையே எழுதினோம்). மெயில் இன்பாக்ஸ் நிரம்பி வழிவதால் இதற்கு மேல் ராமசுப்புவின் மெயில் முகவரிக்கு கோட்டா இல்லை என்று 'போஸ்ட்மாஸ்டர்' தகவல் தருகிறார். இன்பாக்ஸை எம்.பி ராமசுப்பு திறந்து பார்த்து எத்தனை நாட்களாயிற்று என்று தெரியவில்லை.

[email protected] - இதுதான் எம்.பி. ராமசுப்புவின் இமெயில் முகவரி. நீங்களும் அனுப்பிப் பாருங்களேன், ஏதாவது பதில் வருகிறதா என்று பார்ப்போம்.

ஒரு வேளை 'பாஸ்வேர்டை' மறந்திருப்பாரோ..? மக்கள் அவரை மறப்பதற்குள் இன்பாக்ஸைத் திறந்து பார்த்து விடுவார் என நம்புவோம்...!

English summary
Nellai voters are frustrated to reach their Congress MP SS Ramasubbu through email, since his inbox is full and all mails are returning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X