For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

6 கிராம்மி விருதுகள் பெற்ற பாப் பாடகி விட்னி ஹூஸ்டன் திடீர் மரணம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Whitney Houston
பிரபல பாப் இசைப்பாடகி விட்னி ஹூஸ்டன் திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 48.

சனிக்கிழமை மதியம் 4 மணியளவில் அவரது உயிர் பிரிந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விட்னி எலிசபெத் ஹூஸ்டன் என்ற பெயரை விட பாப் உலகில் விட்னி ஹூஸ்டன் என்ற பெயரே பிரசித்தி பெற்றது. 1963 ம் ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் பிறந்த அவர் தன்னுடைய அழகான, கவர்ச்சியான குரலால் பாப் இசை உலகில் முடிசூடா ராணியாக திகழ்ந்தார்.

பாடகியாக, நடிகையாக, மாடலாக, தயாரிப்பாளராக திகழ்ந்த அவர், பிப்ரவரி 11ம் தேதியோடு தன் மூச்சினை நிறுத்திக்கொண்டார். தன்னுடைய இசைப்பயணத்தில் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

இரண்டு எம்மி விருது, 6 முறை கிராம்மி விருதுகள், 22 முறை அமெரிக்கா இசை விருது, 33 முறை பில்பேர்ட்ஸ் இசை விருது என 2010 வரை 415 விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

பிரபல பாடகர் பாபி ப்ரௌனை மணம் முடித்த அவர் அளவிற்கதிகமாக போதை மருந்து உட்கொண்ட காரணத்தினால் சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிவேர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலின் நான்காவது மாடி அறையில் அவரது சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது மரணம் பாப் இசை உலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.காதலை பற்றி அதிகம் பாடி காதலர்களை அன்பால் கட்டிப்போட்ட விட்னி ஹூஸ்டனின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

English summary
Whitney Houston, who ruled as pop music’s queen until her majestic voice and regal image were ravaged by drug use, erratic behavior and a tumultuous marriage to singer Bobby Brown, died Saturday. She was 48.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X