For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்: பாவ்நாத் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி, 8 பேர் காயம்

By Siva
Google Oneindia Tamil News

ராஜ்காட்: குஜராத் மாநிலத்தில் உள்ள பாவநாத் கோவிலின் வருடாந்தர சிவராத்திரி பொருட்காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர், 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள பாவ்நாத் கோவிலின் வருடாந்திர மகாசிவராத்திரி பொருட்காட்சி நேற்றிரவு நடந்தது. இந்த பொருட்காட்சி கோவிலில் இருந்து 150 கிமீ தொலைவில் நடந்தது. இதற்கு 10,000க்கும் அதிகமான பக்தர்கள் வந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும், 8 பேர் காயம் அடைந்தனர் என்று ஜுனாகத் போலீசார் தெரிவித்தனர்.

காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கோவிலுக்கு செல்லும் வழியெங்கும் போக்குவரத்து நெரிசல் ஏறபட்டதால் காயமைடந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டதாக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தெரிவித்தனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சிவன் கோவில்களில் பாவ்நாத் கோவிலும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Six people were killed and eight others injured in a stampede that broke out last night at Bhavnath temple's annual Mahashivratri fair in the foothills of Mount Girnar in Gujarat's Junagadh district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X