For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திவாகரன் மீது மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கு

Google Oneindia Tamil News

Divakaran
திருவாரூர்: பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததற்காக சசிகலாவின் தம்பி திவாகரன் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் ரிஷியூரில் கஸ்தூரி என்பவரது வீட்டை இடித்த வழக்கு, எடையூர் சரவணனை கடத்தி பணம் பறித்தது ஆகிய வழக்குகளில் சசிகலாவின் தம்பி திவாகரன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு திவாகரனை ஏப்ரல் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவாரூர் பேருந்து பணிமனைக்கு எதிரே திவாகரனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதற்கு பாதை அமைப்பதற்காக அந்நிலத்தின் அருகே உள்ள பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு சொந்தமான சுமார் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 6,800 சதுர அடி நிலத்தை அவர் ஆக்கிரமித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று இரவு திவாகரன், மிடாஸ் மோகன் உள்ளிட்ட 10 பேர் மீது திருவாரூர் போலீசார் நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்தனர்.

English summary
Thiruvarur police have filed a land grabbing case against Sasikala's brother Divakaran who is already in prison in connection with so many cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X