For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடைத்தாள் திருத்தும் பணி முடியவில்லை: +2 தேர்வு முடிவுகள் வெளியீடு தாமதம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதி வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.

பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கி 30ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7.61 லட்சம் மாணவ-மாணவியர் பிளஸ் டூ தேர்வு எழுதினர்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் மே மாதம் 2ம் தேதி முடிவடையும் என்றும், இதையடுத்து மே 12ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடைத்தாள் திருத்தும் பணி இன்னும் முடியவில்லை. இதனால் தேர்வு முடிவுகள் மே 2வது வாரத்திற்கு பதிலாக இறுதி வாரத்தில் தான் வெளியாகும் என்று தெரிகிறது.

தற்போது மதிப்பெண்கள் மதிப்பெண் பட்டியிலில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும்.

கடந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
+2 exam results will be announced by the end of this month. Earlier it was expected to be announced on may 12. Since paper evaluation work is not yet completed, the results are postponed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X