For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் உள்பட மேலும் 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் உள்பட மேலும் 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 118க உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பன்றிக் காய்ச்சல் பரவு வருகிறது. பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். என்ன தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும்போதிலும் பன்றிக் காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

பன்றிக் காய்ச்சலுக்கு டேமிப்ளூ மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் டேமிப்ளூ மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் தெரிவித்தார்.

சென்னையில் 60 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவருக்கு பன்றக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மாங்காட்டில் 23 வயது பெண், காட்டுப்பாக்கத்தில் 30 வயது ஆண் ஆகியோரும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 3 பேரும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த 3 பேர் தவிர காஞ்சீபுரத்தில் 68 வயது ஆணும், புதுக்கோட்டையில் 27 வயது பெண்ணும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 118க உயர்ந்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே பன்றிக் காய்ச்சல் தாக்கி வருவதால் மக்கள் சத்தாண உணவுகளை சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

English summary
5 including Porur Ramachandra hospital doctor have got swineflu. Swine flu cases in the state has increased to 118 including these 5.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X