For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்மாடிக்கு எதிராக கருப்பு கொடி, தள்ளுமுள்ளு-புனேயில் பரபரப்பு

Google Oneindia Tamil News

Suresh Kalmadi
புனே: புனே நகராட்சி மன்றத்தில் விளையாட்டு துறை அலுவலகத்தை திறக்க வந்த இந்திய ஒலிம்பிக் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சுரேஷ் கல்மாடிக்கு கருப்பு கொடி காட்டப்பட்டது. மேலும் அவரை தாக்க முயன்றதால், புனேயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் சுரேஷ் கல்மாடி. இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவராக உள்ள இவர், இன்று புனே நகராட்சி அலுவலகத்தில் கட்டப்பட்ட விளையாட்டு துறை அலுவலகத்தை திறந்த வைப்பதற்காக வந்திருந்தார்.

இந்த நிலையில் காமன்வெலத் போட்டியில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள கல்மாடி, புதிய விளையாட்டு அலுவலகத்தை திறக்க கூடாது என்று பாஜக மற்றும் மஹாராஷ்டிரா நவநிர்மன் சேனா ஆதரவாளர்கள், கல்மாடிக்கு கருப்பு கொடி காட்டினர்.

மேலும் புனே நகராட்சி அலுவலகத்திற்கு கல்மாடியை நுழைய விடாமல் தடுக்க பார்த்தனர். அப்போது கல்மாடி மீது தாக்கவும் முயற்சி நடந்தது. இதனால் அவரை சுற்றிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த நிலையில் போலீசாரும், காங்கிரஸ் ஆதரவாளர்களும் சேர்ந்து, புனே நகராட்சி அலுவலகத்தின் பக்க வாசல் வழியாக கல்மாடி நுழைய உதவி செய்தனர். இதனால் எதிர்கட்சியினர் கல்மாடிக்கு எதிராக பலத்த கோஷமிட்டனர்.

English summary
Activists of BJP and Maharashtra Navnirman Sena (MNS) staged a noisy protest in the premises of Pune Municipal Corporation (PMC) today when the scam-tainted Congress leader and city MP Suresh Kalmadi visited the civic body headquarters this morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X