For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

826 புதிய பஸ்கள்: ஜெ. துவக்கி வைத்தார்.. முதல் பஸ் ஸ்ரீரங்கம் to திருவனந்தபுரம்!

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்டுள்ள 826 புதிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் 826 புதிய பஸ்களை கொடியசைத்து ஜெயலலிதா துவக்கி வைத்தார். இதையடுத்து முதல் பேருந்தான ஸ்ரீரங்கம் முதல் திருவனந்தபுரம் செல்லும் பேருந்துக்கான சாவியை ஓட்டுனரிடம் ஜெயலலிதா வழங்கினார். இதையடுத்து அந்த பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதே போல் மற்ற வழித்தடங்களுக்கான பேருந்துகளின் சாவியையும் முதல்வர் ஓட்டுனர்களிடம் வழங்கினார். இந்த புதிய பேருந்துகள் 304 வழித்தடங்களில் இன்று முதல் இயங்கப்படும்.

ிந்த புதிய பஸ்களில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 70 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதே போல் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 177 பஸ்களும், கோட்டம் வாரியாக விழுப்புரத்திற்கு 119ம், சேலத்திற்கு 78ம், கோவைக்கு 109ம், கும்பகோணத்திற்கு 133ம், மதுரைக்கு 97ம், திருநெல்வேலிக்கு 43ம் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 560 மட்டுமே புதிய பஸ்கள் ஆகும். மற்ற 266 பஸ்களும் பழைய சேசிஸ் மீது புதிய பாடி கட்டப்பட்டவை.

இந்த நிகழ்ச்சியில் 30 லட்சம் பள்ளி மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையில் இலவச பஸ் பாஸ்களுக்கான ஸ்மார்ட் கார்டுகளையும் முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார்,

மேலும் பணியின் போது இறந்த 400 வாரிசுதாரர்களுக்கு போக்குவரத்துத்துறையில் பணி நியமன ஆணையையும், 338 வாரிசுதாரர்களுக்கு பணி நிரந்தரத்திற்கான ஆணையையும் வழங்கினார்.

இதே போல் போக்குவரத்துத் துறையில் தற்போது பணியாற்றி வரும் 4511 பதிலி டிரைவர்கள், 4558 பதிலி நடத்துனவர்கள், 88 பதிலி தொழிற்நுட்ப பணியாளர்கள் என மொத்தம் 9157 பேருக்கு பணி நிரந்தரத்திற்கான ஆணையையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட போக்குவரத்துத் துறை ஓட்டுனர்களுக்கான முழு உடல் பரிசோதனை திட்டத்தையும் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதன் மூலம் 22,803 ஓட்டுனர்கள் பயன்பெறுவர்.

இதையடுத்து 2,316 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.47 கோடியே 71 லட்சம் மதிப்பிலான ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையையும் முதல்வர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துத் துறை செயலாளர், சென்னை மற்றும் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கையில் தொழிற்சங்க கொடிகளை ஏந்தி அணிவகுப்பும் நடத்தினர்.

English summary
Chief Minister Jayalalithaa today inducted 826 buses of State Transport Corporations (STCs). She also distributed various welfare measures to transport employees, besides launching smart cards for students' free bus passes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X