For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகர்கோவில்- மங்களூர் ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்துவதற்கு கடும் எதிர்ப்பு!

Google Oneindia Tamil News

Train
நாகர்கோவில்: நாகர்கோவில் - மங்களூர் ஏரநாடு ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்துவது என்ற திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழுவின் தீர்மானத்திற்கு குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க செயலாளர் எட்வர்ட் ஜெனி வெளியிட்டுள்ள அறிக்கை:

திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே ஆலோசனை குழு 53ஆவது கூட்டம் திருவனந்தபுரத்தில் வைத்து 21-03-2012 அன்று நடைபெற்றது. இந்த இந்த கூட்டத்தில் கலந்துரையாடிய தீர்மானங்களை தகவல் அறியும் சட்டம் மூலமாக கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் பெற்றது.

இந்த ஆலோசனை குழுவில் குமரி மாவட்டத்திலிருந்து மூன்று பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் இரண்டு பேர் 21-03-2012 அன்று நடந்த கூட்டத்தில் பங்கு பெறவில்லை. இந்த கூட்டத்தில் குமரி மாவட்ட ரயில்வே வளர்ச்சிக்கு எதிராக பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளன. இந்த தீர்மானங்கள் குமரி மாவட்ட ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் தீர்மானமாக நாகர்கோவில் - மங்களூர் ஏரநாடு 6605/6606 ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்துவது ஆகும். இந்த ரயில் திருவனந்தபுரத்துக்கு இந்தபக்கம் அதாவது குமரி மாவட்ட ரயில் நிலையங்கள் மூலமாக குறைந்த வருமானம் வருகிறது என காரணம் கூறி நிறுத்துவது. இந்த ரயிலை நிறுத்த அனைத்து அலோசனை குழு உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பையும் ரயில்வே அதிகாரிகளுக்கு கண்டனத்தையும் தெரிவித்து கொள்கிறோம். இந்த ரயிலை குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் விதமாக காலஅட்டவணையை மாற்றி பாறசாலை, இரணியல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காயங்குளம் - ஆலப்புழா - எர்ணாகுளம் மார்க்கம் ரயில்வழி தடம் இருவழிபாதையாக மாற்றிய உடன் இந்த ரயிலின் காலஅட்டவணை மாற்றி அமைக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. இதையும் மீறி இந்த ரயிலால் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்பாடு இல்லை என்று நிர்வாகம் முடிவு எடுத்தால் இதைபோல் குமரி மாவட்ட மக்களுக்கு பயன்படாமல் இயங்கும் கன்னியாகுமரி - திப்ருகர், நாகர்கோவில் - ஷாலிமர் ஆகிய இரண்டு வராந்திர ரயில்களையும் திருவனந்தபுரத்துடன் நிறுத்தி விடவும் கோரிக்கை வைக்கிறோம்.

இரண்டாவது தீர்மானமாக திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி,மதுரை - கொல்லம் ஆகிய இரண்டு ரயில்களையும் நாகர்கோவில் சந்திப்பு(கோட்டார்) ரயில் நிலையம் வராமல் இயக்க வேண்டும் என்பது ஆகும். கேரளா மார்க்கம் பயணிக்கும் சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயிலை கேரளா பயணிகளுக்கு சாதகமாக எந்த மாற்றமும் செய்யாமல் திருநெல்வேலி, மதுரை மார்க்கம் தமிழக பயணிகள் அதிகமாக பயணிக்கும் ரயிலை மட்டுமே கோட்டார் ரயில் நிலையம் வராமல் இயக்க திருவனந்தபுரம் கோட்ட மலையாள அதிகாரிகள் தமிழகத்துக்கு எதிராக முயற்சி செய்கின்றனர்.

சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயிலை மாற்றம் செய்தால் குமரியில் வசிக்கும் மலையாள பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று இதை மாற்றம் செய்யவில்லை.

மூன்றாவது தீர்மானமாக கன்னியாகுமரி - நாகர்கோவில் இடையே இயங்கிக் கொண்டிருக்கும் நான்கு பயணிகள் ரயிலை ரத்து செய்வது ஆகும். இதற்கு ஆலோசனை குழு உறுப்பினர் சம்மதம் தெருவித்துள்ளார். இந்த பயணிகள் ரயிலை ரத்து செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இதற்கு மாற்று ஏற்பாடாக நாகர்கோவில் - கொல்லம் புறநகர் (மெமு) ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து கன்னியாகுமரி - கொல்லம் ரயிலாக இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் பட்சத்தில் கேரளாவிலிருந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

நான்காவது தீர்மானமாக பெங்களுர் - கன்னியாகுமரி ரயில் ஜுலை மாதம் வெளியிடப்படும் ரயில் கால அட்டவணையில் குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியாடி, குழித்துறை மேற்கு ரயில் நிலையங்களில் குறைந்த வருமானம் வருகிறது என காரணம் கூறி நிறுத்தாமல் இயக்க வேண்டும் என்பது ஆகும்.

இதற்கும் குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் எதிர்ப்பை தெரிவிக்கிறது. இந்த ரயிலை தினசரி திருவனந்தபுரத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டு வீடுகளுக்கு வரும் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு தொழிலாளிகள் உபயோகபடுத்தி வருகின்றனர்.

அடுத்த தீர்மானமாக சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயில் ஜுலை மாதம் முதல் குறைந்த வருமானம் வருகிறது என காரணம் கூறி ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்ல நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. இந்த ரயில் பல ஆண்டுகளாக இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இதை மாற்றம் செய்ய கூடாது. இதற்கும் குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இந்த கூட்டத்தில் குமரி மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.நாகராஜன் மூன்று கோரிக்கையை முன்வைத்துள்ளார். முதல் கோரிக்கையாக நாகர்கோவில் சந்திப்பு - கோட்டார் ரயில் நிலை சாலை மோசமாக நிலையில் உள்ளது என்ற கோரினார். இதற்கு பதிலளித்த ரயில்வே அதிகாரி இந்த சாலையில் போருந்துகளும், பாரவண்டிகளும், திறந்த சரக்கு வண்டிகளும் அதிகமாக இயங்குவதால் சாலை மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம்.

இரண்டாவது கோரிக்கையாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இலவச கழிவறை வசதி செய்து தருதல் ஆகும். இதற்கு பதிலளித்த ரயில்வே அதிகாரி தற்போது ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருக்கும் அறையின் உள்பகுதியில் கழிவறை வசதி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இந்த கழிவறையை முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கழிவறை கட்ட முன்வந்தால் ரயில்வே துறை இதற்கான இடத்தை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

மூன்றாவது கோரிக்கையாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறை பற்றி கோரியுள்ளார். இதற்கு பதிலளித்த ரயில்வே அதிகாரி தற்போது இரண்டு படுக்கை வசதி கொண்ட ஒரு அறை மட்டுமே உள்ளது என்றும் அடுத்த அறையை அதிகாரிகள் ஓய்வு அறையாக மாற்றியுள்ளார்கள். அந்த அறையை ரயில்வே குடியிருப்பில் மாற்றம் செய்ததும் இரண்டு அறை கிடைக்கும் என்று பதிலளித்துள்ளார்.

திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகளால் குமரி மற்றம் நெல்லை மாவட்ட ரயில் தடங்கள் தெடர்ந்து புறக்கணிக்கபட்டு வருகிறது. குமரி மற்றும் நெல்லை மாவட்ட ரயில் வழி தடங்களை மதுரை கோட்டத்துடன் மீண்டும் இணைப்பதுதான் சமச்சீரான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Kumari train passengers have opposed the stopping of Eranadu train at Thiruvananthapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X