For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேமுதிக பெற்ற டெபாசிட்: சிக்கலில் அமைச்சர் முகமது ஜான்

Google Oneindia Tamil News

Mohammad Jaan
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அமைச்சர் முகமது ஜான் பொறுப்பு வகித்த பகுதியில் தான் தேமுதிக அதிக வாக்குகள் பெற்றுள்ளது. இதனால் அவருக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றும், அதிமுகவை எதிர்த்து போட்டியிடும் அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறினார்.

இதனால் புதுக்கோட்டையில் அதிமுக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட 32 அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அடங்கிய தேர்தல் பணிக்குழு தொகுதியில் முகாமிட்டு இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்தனர். வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக 1,01,998 வாக்குகளும், தேமுதிக 30,500 வாக்குகளும் பெற்றது.

புதுக்கோட்டை நகரத்தில் உள்ள கலீப் பகுதியின் 89வது வார்டு மற்றும் 91, 92 (எம்) ஆகிய மூன்று வாக்குச்சாவடியில் 1,504 வாக்குகள் பதிவானது. இதில் அதிமுகவுக்கு 606 வாக்குகளும், தேமுதிகவிற்கு 823 வாக்குகளும் கிடைத்தது.

இந்த மூன்று வாக்குச்சாவடிகளில் அதிமுகவை விட தேமுதிக அதிக வாக்குகள் பெற்றதற்காக ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையிலான நிர்வாகிகளைப் பாராட்டிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் 3 ஒன்றியச் செயலாளர்களுக்கு தலா அரை பவுன் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார்.

இதில் ஒரு விஷேசம் என்னவென்றால், இந்த மூன்று வாக்குச்சாவடிகளுக்கும் அதிமுக சார்பில் தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் முகமது ஜானும், அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தமிழ் மகன் உசேனும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த வாக்குச்சாவடிகளில் அதிமுகவை தேமுதிக பின்னுக்கு தள்ளியதால் அமைச்சர் முகமது ஜானுக்கும், தமிழ் மகன் உசேனுக்கும் அரசியல் ரீதியாக சிக்கல் உள்ளதாக அரசியல் வட்டராத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

English summary
Minister for Backward Classes and Minorities Welfare A. Mohammad Jaan may face trouble as DMDK got more votes at 3 areas in Pudukkottai which were allotted to him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X