For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முலாயம்சிங் பாஜகவின் ஏஜெண்ட்: காங். செய்தித் தொடர்பாளர் பேச்சால் சமாஜ்வாதி செம கடுப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Mulayam Singh Yadav
மொராதாபாத்: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்து பின்னர் சமாதானமாகியிருக்கும் சமாஜ்வாதி கட்சியை கடுப்பேற்றியிருக்கிறார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் அல்வி. சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், பாரதிய ஜனதாவின் ஏஜெண்ட் ஒரு அதிரடியாக விமர்சித்திருப்பதுதான் இந்த கடுப்புக்குக் காரணம்.

உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ரஷீத் அல்வி, இன்று நேற்று அல்ல.. 10 ஆண்டுகளாக கூறிவருகிறேன்.. முலாயம்சிங் ஒரு பாஜக ஏஜெண்ட்தான். பாஜக போடும் டியூனுக்கு ஏற்ப இந்த நாட்டிலேயே ஆடக்கூடிய ஒரே ஒருவர் யாராக இருப்பார் எனில் அது முலாயம்சிங் யாதவாகத்தான் இருக்க முடியும் என்றார்.

இதனால் கடுமையான அதிருப்தியில் இருக்கிறது சமாஜ்வாதி கட்சி. ரஷீத் அல்வி பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் சகித் சித்திக், இத்தகைய கருத்துகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா உள்ளிட்ட மூத்த தலைவர்களின் அனுமதியுடன் தான் ரஷீத் அல்வி பேசியிருக்க வேண்டும். அப்படி அவர்கள் அனுமதி கொடுத்திருந்தால் ஒவ்வொரு பிரச்சனையிலும் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவை எதிர்பார்க்கக் கூடாது. எங்களது ஆதரவு தேவையில்லை என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டுப் போகலாம் என்றார்.

English summary
In what could lead to a dangerous new twist in the Congress-Samajwadi Party relationship, the Congress' Rashid Alvi, in a surprise attack, called SP chief Mulayam Singh Yadav a BJP agent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X