For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழத் தமிழர்களை காக்க இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம்கள் இணைந்த புதிய அமைப்பு துவக்கம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டிக்க இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் சேர்ந்து தமிழ் மக்கள் மன்றம் என்ற புதிய அமைப்பை சென்னையில் துவங்கியுள்ளனர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் சேர்ந்து தமிழ் மக்கள் மன்றம் என்ற புதிய அமைப்பை சென்னையில் துவங்கியுள்ளனர். இந்த அமைப்புக்கு சென்னை மயிலை பேராயர் ஏ.எம். சின்னப்பா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஹைதர் அலி, இந்திய தவ்ஹித் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பக்கர், இந்திய கிறிஸ்துவ மக்கள் கட்சி தலைவர் எப்.ஏ.நாதன், தேசிய லீக் தலைவர் பஷீர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், தமிழக இந்து துறவியர் பேரவை அமைப்பாளர் சுவாமி சதா சிவனந்தா உள்பட 11 இயக்கங்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.

இது குறித்து பேராயர் ஏ.எம்.சின்னப்பா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டிக்க பல்வேறு மதத் தலைவர்கள் அடங்கிய அமைப்பை துவங்கியுள்ளோம். இலங்கையில் போருக்குப் பின்னால் தமிழர்களின் பகுதிகள் மறுகட்டமைப்பு செய்யப்படும் என்ற அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவின் வாக்குறுதி நிறைவேற்றப்படவேயில்லை. மாறாக தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர் பகுதிகளில் ராணுவமயமாக்கல் திணிக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வெளிநாடுகளின் உதவியோடு கட்டப்படும் வீடுகளைக் கூட சிங்களர்களுக்கு கொடுக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் 2,000க்கும் அதிகமான இந்து கோவில்கள், 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன.

எனவே, ஐ.நா. சபையும், மத சுதந்திரத்தை பாதுக்காக்க நிறுவப்பட்ட ஆணையமும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

English summary
Hindu, muslim and christian leaders have joined together and started a new organisation called Tamil Makkal Mandram to save Lankan Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X