For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை தமிழகத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம்: தென்னை விவசாயிகள் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Coconut
செங்கோட்டை: தேங்காய் கொள்முதல் விலை குறைந்துள்ளதை எதிர்த்து தேங்காய் விவசாயிகள் நாளை மாநிலம் தழுவிய அளவில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தவிருக்கிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் வடகரை, பண்பொழி, இடைகால், தென்காசி, பாவூர்சத்திரம், சிவகிரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. தேங்காய்க்கு உரிய கொள்முதல் விலை இல்லாததால் சமீப காலமாக விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். நுகர்வோருக்கு தேங்காய் ரூ.8 முதல் 10 வரை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டாலும் ஒரு தேங்காய்க்கு ரூ.2 முதல் ரூ.2.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் தென்னை பயிரிடும் விவசாயிகள் தேங்காய்களை விற்பனை செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர். தென்னை சாகுபடி உள்ள அனைத்து பகுதிகளிலும் கொள்முதல் நிலையங்களை அரசே அமைக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை இதுவரை அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தேங்காய் கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.15 என நிர்ணயிக்கக் கோரியும், தென்னை சார் பொருட்களுக்கான தொழில்களை துவக்க வலியுறுத்தியும், நார் பொருட்கள், சிரட்டை, கரு போன்ற பொருட்களுக்கு விலை வழங்க அரசை வலியுறுத்தியும் நாளை(26ம் தேதி) தமிழகம் முழுவதும் தென்னை விவசாயிகள் சார்பில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடக்கிறது.

நெல்லை மாவட்ட தென்னை விவசாயிகள் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மாலை 4 மணி்க்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வேலுமயில் தலைமையில் தேங்காய் உடைப்பு போராட்டம்

English summary
Coconut famers are going to stage a state level protest by breaking coconuts on tuesday. They are going to do so against low procurement price for coconuts this season.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X