குடியரசுத் தலைவர் தேர்தல்: மமதாவுடன் ராசியாக காங்கிரஸ் முடிவு- கபில் சிபல் நேரில் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil

இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கபில்சிபல், மமதாவுடன் எப்பொழுது உரையாடினாலும் அது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அதுதான் இன்றைய சந்திப்பிலும் நடந்தது என்று மட்டும் கூறினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் மமதா பானர்ஜி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியையே ஆதரிக்க வேண்டும் என்று மேற்கு வங்க காங்கிரஸ் பொறுபாளர் ஷகீல் அகமது நேற்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கபில்சிபலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வரும் 19-ந் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பு தங்களது ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிப்போம் என்று மமதா பானர்ஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications