For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனாதிபதி தேர்தல்- வேட்பு மனு பரிசீலனை ஆவணங்களை சங்மாவுக்கு கொடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

By Mathi
Google Oneindia Tamil News

PA Sangma
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுக்கள் பரிசீலனை தொடர்பான ஆவணங்களை வேட்பாளரான சங்மாவுக்கு கொடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்வோர் ஆதாயம் தரக்கூடிய பதவியில் இருக்கக் கூடாது என்பது விதி. ஆனால் வேட்புமனுத்தாக்கலின் போது இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவராக பிரணாப் முகர்ஜி இருந்தார் என்பது சங்மாவின் ஆட்சேபனை. இது தொடர்பாக பிரணாப்பிடம் விளக்கம் கோரப்பட்டது. அந்த விளக்கத்தை ஏற்று பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

ஆனாலும் இந்திய புள்ளியியல் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பிரணாப் முகர்ஜி கொடுத்த ராஜினாமா கொடுத்தம் போலியானது என்று கூறி பாஜக சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தொடங்கிய்ள்ளது. இதேபோல் வேட்புமனு பரிசீலனை பற்றிய ஆவணங்களை தமக்கு வழங்க வேண்டும் என்று பி.ஏ.சங்மா, தேர்தல் அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து வேட்புமனு பரிசீலனை ஆவணங்களை சங்மாவுக்கு கொடுக்கலாமா என்று தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் அதிகாரி அக்னிகோத்ரி யோசனை கேட்டிருந்தார். தேர்தல் ஆணையமும் பி.ஏ.சங்மா கேட்கும் ஆவணங்களைக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சங்மாவின் வழக்கறிஞர் சத்யபால் ஜெயின் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட அத்தேர்தல் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர முடியும். வேட்புமனுத்தாக்கலின் போது பிரணாப் இந்திய புள்ளியியல் நிறுவனத் தலைவராகத்தான் இருந்தார். அதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. வேட்புமனுக்களில் உள்ள அவரது கையெழுத்துகளையும் இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கும் ராஜினாமா கடிதத்தில் உள்ள கையெழுத்தையும் மன்மோகன்சிங்கும் சோனியாவும் பார்த்து விளக்கம் தர வேண்டும் என்றார் அவர்.

English summary
The Election Commission today asked the returning officer for the presidential poll to provide details of the scrutiny proceedings and the order on rejection of opposition candidate PA Sangma's objection to UPA nominee Pranab Mukherjee's candidature.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X